பொருளாதார சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற காரணங்களால் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேல் மறுத்து விட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் வடிவேலுவிடம் கடிதங்கள் மூலம் விளக்கம் கோரியிருந்தது. இது குறித்த கடிதத்துக்கு பதிலளிக்கையிலேயே வடிவேலு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க 2016 யூன் மாதம் 1ம் ஒப்புக்கொண்டிருந்ததாகவும் 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் தன்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தாகவும் எனினும் 2016 டிசம்பர் வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு திகதிகளில் அந்த படத்தில் நடித்து கொடுத் நிலையில் தன்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது. அத்துடன் கெட்ட நோக்கத்தோடு தனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்தில் ஏதோ தனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

இதனால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் தன்னை வற்புறுத்துவதற்கு முன்பு தன்னை நேரில் அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது.

இந்த படத்தில் நாசர் நடிப்பதால் நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால் தான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என வடிவேலு தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here