ஆர்யா தான் தேர்தெடுக்கும் பெண்ணுடன் குறைந்தது 2 வருடங்களாவது வாழ வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இன்று ஆர்யா தான் மணக்கவிருக்கும் பெண்ணை மாலை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
16 பெண்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், கடைசியாக சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் இறுதி போட்டிக்கு வந்துள்ளனர்.
இறுதி போட்டியில் மணப்பெண் யார் என்பதை ஆர்யா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுடன் 2 வருடங்கள் குடும்பம் நடத்த வேண்டும் என்றும், அதற்குள் விவாகரத்து செய்யக்கூடாது என்றும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணப்பெண்ணாக தேர்வாகும் பெண் ஆர்யாவை மணக்க விருப்பம் இல்லை என்று அறிவித்தால், அது ஏற்கப்படும் என்றும் அவருக்கு உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.