ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 62ஆவது படத்தினை நடித்து வருகின்றார். இதில் நடிகையாக கீர்த்தி சுரேஸ் நடிக்கின்றார்.

இந்நிலையில் குறித்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை வரலட்சுமி, நடிகர்களான ராதாரவி மற்றும் பழ.கருப்பையா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகை வரலட்சுமி அரசியல்வாதியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளதுடன் குறித்த படம் அரசியலையும் விவசாயத்தையும் கருப்பொருளாக கொண்டமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here