தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். சினிமாவில் பிசியாக இருந்ததால் தனக்கு முன்பே தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார்.
ஏற்கனவே காஜல் அகர்வால் ரகசியமாக ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதுபற்றி அவர் இதுவரை வெளிப்படையாக எந்த தகவலும் வெளியிட்டதில்லை. அஜீத், விஜய், சிரஞ்சீவி, பிரபாஸ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அதே சமயத்தில் இளம் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார்.
ஜோடியாக நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் நிஜ வாழ்விலும் காதல் ஜோடிகளாக மாறியிருக்கின்றனர். அதுபோல் உங்களுடன் நடித்த நடிகர்களில் யாராவது உங்களிடம் காதலை சொல்லியிருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. போது பதில் அளித்தார்.
இதுபற்றி காஜல் கூறுகையில், என்னுடன் நடித்த ஹீரோக்கள் தங்களுக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர். அவர் ஜோக் அடித்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும். அல்லு அர்ஜுன் ஸ்டைலான உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார்.
ஹீரோக்களில் சிரஞ்சீவி மிகவும் ரொமான்டிக் ஆனவர். பல்வேறு ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். நடிகர் நவ்தீப் மட்டும் இரண்டு முறை என்னிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார் என்றார்.