பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி சரிகமப. இந்நிகழ்ச்சியில் பல திறமையான இளைஞர்கள் இருந்தாலும் அனைவரையும் கவர்ந்தவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள் தான்.

63 வயதிலும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியவர். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில் வர்ஷா என்ற பெண் வெற்றி பெற்றார். இவருக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசை ரமணியம்மாள் வென்றார். பரிசை இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜாவும், சந்தோஷ் நாரயணனும் வழங்கினர். இவருக்கு 4 லட்சம் காசோலையும், 5 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் மேலும் 1 லட்சம் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

ரமணியம்மாள் இந்த பரிசை தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு வழங்குவேன் என்றும், ஆதரவற்ற குழந்தைகள், தெருவோரத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்துவிட்டு மகிழ்ச்சியடைவேன் என்று கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here