திரையுலகம் நடத்திய மவுன அறவழி போராட்டத்தில் ஒரு காமெடி. ஒரு மணி வரைக்கும் போராட்டத்திற்கு அனுமதி.
நேரம் நெருங்க நெருங்க, போலீசுக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பித்தார் தனுஷின் மன்றத் தலைவர்.
கொசுக்கடி பொறுக்க முடியாத போலீஸ், நேராக தனுஷிடமே வந்து, ‘சார்… உங்க மன்ற தலைவரை கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்க.
2மணிக்கு இடத்தை ஒப்படைக்குறோம்’ என்று சொல்ல… அவரும் போனை வாங்கி பேசினார்.
‘யோவ்… நீ தனுஷே இல்ல. அவர் குரல்ல பேசி ஏமாத்துறீயா?’ என்றார் மன்றம்.
அவ்வளவு சொல்லியும் அடங்காத தலைவரை, அதே போலீஸ் நேரில் அழைத்து வந்து தனுஷிடம் விட்டது.
அப்புறம்தான் சமாதானம் ஆனார் அவர்