இளம் வெற்றி நடிகர் சிவகார்த்திகேயன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் இனிமேல் அவர் நடிக்கும் திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகள் இருக்காது என தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு எப்படி வந்தார் என்பதை நினைத்தால் பலருக்கும் ஒரு உத்வேகம் பிறக்கும்.
இந்நிலையில் ‘சீமராஜா’ திரைப்பட ஊடகசந்திப்பின்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வருடம் தனக்கு மூன்று படங்கள் வர இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சீமராஜா படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இனி நான் நடிக்கும் படங்களிலும் மது அருந்தும் காட்சிகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ள அவர் விரைவில் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.