திருமணத்திற்கு தயாராகும் தீபிகா-ரன்வீர் ஜோடி

நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் நடிகை தீபிகா படுகோனுக்கும் இந்த வருடம் திருமணம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுடைய திருமணம் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளதாகவும், செம்டரம் தொடங்கி டிசெம்பர் வரையில் நான்கு திகதிகள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் சினித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரன்வீர் சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா பிரதிநிதியாக உள்ளதால், இவர்களின் திருமணத்தை அந்நாட்டில் நடத்த திட்மிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருக்கிடையில், அவர்கள் முதலில் இணைந்து நடித்த பாஜி ராவ் சமஸ்தானி என்னும் திரைப்படத்தின் மூலம் நட்பு மலர்ந்தது.

அதன் பின்னர் நட்பு காதலாக மாறியுள்ள நிலையில், இவர்களுக்கு திருமணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here