வான் வெளியில் வந்த செய்தி கனவாகி போகாதோ என் அண்ணா மறைந்தாய் நீ என்ற செய்தி பொய்யாகி போகாதோ அண்ணா வடமாகாண அச்சகத்துறையின் விடிவெள்ளியே ஆயிரக்கணக்கானோரை அச்சகத்துறையில் உருவாக்கிய சிற்பியே வடக்கின் அச்சகத்தார் என்று பெருமையுடன் கூறி நின்றாயே கரி கண்ணன் அச்சகம் என பெரு விருட்சமாய் வளர்ந்து நின்றாயே கணப்பொழுதில் உறவுகள் உடைந்து போக அச்சகத்துறையினர் அதிர்ந்து போக எமையெல்லாம் நிர்க்கதியாக்கியதே உன் மறைவு போய் வா எனது சகோதரனே உனது ஆத்மா இளைப்பாறுதலடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
தகவல்:-கண்ணன்(விமல்)
